வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தில் மதவாச்சி தேர்தல் தொகுதியில் ரம்பாவ பிரதேசசபைப்பிரதேசத்தில் ஏ-9 பாதையருகே மருத நிலச்சூழலிலே அமைந்துள்ள முஸ்லிம் கிராமமே இக்கிரிகொள்ளாவ கிராமமாகும்.
இனி இக்கிராமத்தில் இன்று ஏ-9 பிரதான பாதையருகே அழகிய தோற்றத்தோடு வளர்ச்சிப் பாதையில் பயணித்தக்கொண்டிருக்கும் இக்கிரிகொள்ளாவ பாடசாலையின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால். அது 1950 ஆம் அண்டு இக்கிரிகொள்ளாவ குளத்தருகே குடியிருப்புகள் காணப்பட்ட சூழலில் தற்காலிக்கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டதாக அறியக் கிடக்கின்றது. அதுவே இக்கிரிகொள்ளாவ மக்களின் கல்வி வளர்ச்சிக்கு இடப்பட்ட அடித்தளமாகும் 31 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் முதல் அதிபராக திரு மு. மாரிமுத்து என்பவர் செயற்பட்டுள்ளார். அதனையடுத்து இரண்டாவது அதிபராக திரு M.வேலுப்பிள்ளை என்பவர் பணியாற்றியுள்ளார்.
மாணவர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க இடவசதிகளின் தேவைகளும் அதிகரித்தன. குளக்கட்டுக்கு அருகாமையில் இருந்த குடியிருப்புகளும் படிப்படியாக பிரதான வீதிக்கருகே இடம் பெயரத்தொடங்கின.இதனையடுத்து 1956ம் ஆண்டு தற்போதைய இடத்துக்கு பாடசாலை மாற்றப்பட்டது. அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு, மைத்திரிபால சேனாநாயக அவர்களினால் நிரந்தர கட்டிடமும் அமைத்துக்கொடுக்கப்பட்டதாக அறியக்கிடக்கின்றது. சிங்களம், தமிழ் இரு மொழிகளிலும் அன்று இப்பாடசாலையில் கல்வி புகட்டப்பட்டிருந்தது.பின்னர் வஹமல்கொள்ளாவ கிராமத்தில் சிங்கள மாணவர்களுக்கு தனியாக ஒரு பாடசாலை அமைத்துக்கொடுக்கப்பட்டதோடு 1959ம் ஆண்டு சிங்கள மாணவர்கள் வஹமல்கொள்ளாவ பாடசாலைக்கு சென்றதோடு இப் பாடசாலை தனியே தமிழ் மொழி பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. மாணவர் தொகையில் அதிகரிப்பு ஏற்படவே 1964ம் ஆண்டு மற்றுமொறு நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்டது.
1968ஆம் ஆண்டு இப்பாடசாலைக்கு அதிபராக மாற்றம் பெற்று வந்த ஜனாப் M.M.M.A. கபூர் அவர்களின் காலத்தில் துரித முன்னேற்றம் பெற்றது. அதன் முதற் கட்டமாக 1970ஆம்,1971ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இரு மாணவர் சித்தியடைந்தனர்.
1971ஆம் ஆண்டில் ஜனாப் H.சித்திக் அவர்களும்,1973ஆம் ஆண்டில் ஜனாப் A.P.S.ஹமீட் அவர்களும், ஜனாப் M.C.M.ஜவுபர் அவர்களும், ஆகிய இருவரும் கடமையாற்றினர்.1974ஆம் ஆண்டில் ஜனாப் M.U.Z. ஆப்தீன் அவர்களும் M.M.மொஹமட் அலி ஆகிய இருவரும் கடமையாற்றினர். 1976ஆம் ஆண்டில் ஜனாப் A.L.K.அப்துல் காதர் அவர்களும், அதே ஆண்டில் ஜனாப் M.U.A.கையூம் அவர்களும் கடமையாற்றினர். ஜனாப் M.U.A.கையூம் அவர்களின் காலத்தில் மேலும் பாடசாலையின் கல்வி வளர்ச்சி துரிதகெதியில் அதிகரித்து. இதில் க.பொ.த.சாதரண தரம் ஆரம்பிக்கப்பட்டுது. மேலும் 1979 க.பொ.த. உயர் தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 1981ஆம் ஆண்டு முதற் தடவையாக க.பொ.த.உயர் தரப் பரீட்சையில் மாணவர்கள் தோற்றி நூறு வீதம் சித்தியடைந்தனர். 1981ஆம் ஆண்டு ஜனாப் P.T.ஹபீப் முஹம்மது மௌலவி அவர்களும்,1982ஆம் ஆண்டு ஜனாப் S.A.சமது மௌலவி அவர்களும், ஜனாப் J.அமீர் அவர்களும், இவர்கள் இருவருடன் மீண்டும் ஜனாப் M.U.A.கையூம் அவர்கள் பாடசாலையை பொறுப்பேற்றார்.இவரின் இக்காலப்பகுதி கல்வி வளர்ச்சியின் முக்கிய காலப்பகுதியாகும். மாணவர்களும் கல்வித் தாகமுடையவர்களாக காணப்பட்டதால், இக்காலப் பகுதியிலேயே (1986ஆம் ஆண்டு) முதற் தடவையாக இரு மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றனர். இவரின் காலத்தில் 1994ஆண்டு க.பொ.த.உயர் தரத்தில் வர்த்தகப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுது.
1998ஆம் ஆண்டு ஜனாப் M.U.A கையூம் அவர்கள் பதவி உயர்வு பெற்று கல்விக் காரியாலத்திற்குச் சென்றார். இவரைத் தொடர்ந்து ஜனாப் M.A.C.M.புஆத் அவர்கள் அதிபராக பாடசாலையைப் பொறுப்பேற்றார்.இதே ஆண்டு ஜனாப் I.அப்துல் ஜெலீல் அவர்கள் அதிபராக பாடசாலையைப் பொறுப்பேற்றார். இவரின் காலப்பகுதியில் இரு மாடிக் கட்டிடம் ஒன்றும்,விஞ்ஞான ஆய்வு கூடம், நூல் நிலையம், கணனி அறை என்பன நிறுவப்பட்டதுடன், மின்சார வசதியும் பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இவரின் காலப்பகுதியிலேயே ஜனாப் S.C.S.இப்ராஹிம் (சட்டத்தரணி) அவர்களின் வேண்டுகோளுக்கினங்க காலஞ்சென்ற முன்னால் அமைச்சர் ஜனாப் M.H.M.அஷ்ரப்(ஜனாதிபதி சட்டத்தரணி) அவர்களின் பன்முகபப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் 100x20 கட்டடம் ஒன்றும் நிர்மானிக்கப்பட்டது. ஜனாப் I.அப்துல் ஜெலீல் 2004ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து ஜனாப் R.றாசீன் அவர்கள் அதிபராக கடமையேற்றார். இவரைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு ஜனாப் A.C.சரிபுத்தீன் அவர்கள் அதிபராக கடமையேற்றார். இவரைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஜனாப் M.M.கலீல் அவர்கள் அதிபராக கடமையேற்றார். இதே ஆண்டு ஜனாப் S.A.அப்துல் ஹலீம் அவர்கள் அதிபராக கடமையேற்றார். இவரின் காலத்தில் அலுவலக அறை நவீனமயப்படுத்தப்பட்டது. மேலும் க.பொ.த. உயர் தரம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு 2012ஆம் ஆண்டுலேயே அதிக மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றனர். இவரின் காலத்தில் பிரதான நுழைவாயிலின் அமைப்பு அமைக்கப்பட்டதுடன் 60x20 கட்டடம் ஒன்றும் நிர்மானிக்கப்பட்து. இவரின் காலத்திலேயே உயர்தர மாணவர்களின் பெறுபேற்றை உயர்த்துவதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாசாலைச் சூழல் மண்ணரிப்பினால் பாதிப்படையாதவாறு சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டங்களும், பாடவேலைகளுக்குரிய மின்சார மணி ஒலி செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு S.A.அப்துல் ஹலீம் அவர்கள் ஓய்வுபெற்றுச் சென்றதனால் (இப்பாடசாலையிலிருந்து ஓய்வுபெற்றுச் சென்ற முதலாவது அதிபராவார்) ஜனாப் I.A.நஜீம் அவாகள் அதிபராக கடமையேற்றார். இவரின் காலத்தில் தான் 1C பாடசாலையாக இருந்த இப்பாடசாலை 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன், இதன் பெயரை அந்-நூர் மகா வித்தியாலயம் என பெயர்சூட்டப்பட்டுது.






