பிரதி அதிபர் செய்தி
எம்.ஸஹீட்
வட மத்திய மாகாணத்தில் அநுராதபுர மாவட்டத்தில் ஏ9 பிரதான வீதிக்கு அருகில் இக்கிரிகொள்ளாவையில்அமைந்த அழகிய பாடசாலையே அந்-நூர் மகா வித்தியாலயமாகும். ஆண்டுதோறும் புதிய திட்டங்களுடன் மனித, பௌதிக வளம் மேம்படுத்தப்பட்டு மாவட்டத்தில் பிரசித்தமான சிறந்த பாடசாலையாக மிளிர்கின்றது.
தரம் 5, க.பொ.த.(சா/தரம்), க.பொ.த.(உ/தரம்) பரீட்சைகளில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதனைகள் பல நிகழ்த் தியதுடன் அதிக எண்ணிக்கையான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதில் மாகாணத்தில் தமிழ் மொழி மூலத்தில் (இதுவரை 2023) முதலாம் இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.
விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை, கலாச்சார, இணைப்பாடவிதான செயற்பாடுகள் போன்றவற்றிலும் எமது பாடசாலை முன்னனி வகிப்பதுடன் வலய, மாகாண, தேசிய மட்டங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியது இப்பிரதேசத்திற்கு பெருமையளிப்பதாகும்.
இச்சாதனைகள் பலவற்றை நிகழ்த்த எமது அதிபர் உட்பட முகாமைத்துவ குழு, ஆசிரியர் குழாம், SDC, OBA, பெற்றோர்கள், நலன் விரும்பிகளின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
மேலும் தொடர்ச்சியாக இவர்களின் பங்களிப்புடன் இப்பாடசாலையை தொடர்ச்சியாக பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என வாழ்த்துகிறேன்.
எம்.ஸஹீட்
பிரதி அதிபர்
அந்-நூர் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை).






