அதிபர் செய்தி
திரு. ஏ.எல்.மிஸ்கீன் விதானே
பாடசாலை என்பது நற்பிரஜைகளை உருவாக்குகின்ற ஒரு சமூக நிறுவனமாகும். மாணவர்களை உள்வாங்கி எதிர்கால சமூகப்பிரஜைகளை உருவாக்குவதில் அதன் பங்கு மகத்தானது. அனுராதபுர மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு மத்தியில் அ/அந் நூர் மகா வித்தியாலயம்(தேசிய பாடசாலை) முக்கிய இடத்திலுள்ளது. 1934ம் ஆண்டு 31 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1950ம் ஆண்டு தற்போதிருக்கின்ற இடத்திற்கு மாற்றப்பட்ட இப்பாடசாலை இன்று(2023) 1200 மாணவர்களை தன்னகத்தே கொண்டு வீறுநடை போட்டுப்யணித்துக்கொண்டிருக்கின்றது. 1976ம் ஆண்டு க.பொ.த (சா/தர)வகுப்பும் 1982ம் ஆண்டு க.பொ.த (உ/தர) வகுப்பும் இங்கே ஆரம்பிக்கப்படடுள்ளது. இப்பாடசாலையில் படித்தவர்கள் இன்று வைத்தியர்களாக, பொறியியலாளராக, சடட்டத்தரணிகளாக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, மேலும் பல்வேறு துறைசார் முக்கிய பதவி வகிப்பது இப்பாடசாலை ஆற்றிய பங்கிற்கு ஓர் சான்றாகும். அத்துடன் இப்பாடசாலைக்கு அதிபராக பதவியேற்ற ஜனாப்: கையூம் அவர்களின் காலம் பாடசாலையின் கல்வி மறுமலரச்சியில் பொற்காலம் எனக் கூறப்படுகின்றது. முன்னாள் அதிபராக இருந்த எஸ்.ஏ.ஏ. ஹலீம் அவர்களுடைய காலப்பகுதியில் முதன்முதலாக மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமையும், பல வளங்கள் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஐ.ஏ.நஜீம் அவர்களின் காலத்தில் (2016-2019 வரை) பல்வேறு அபிவிருத்திகள் நடைபெற்றுள்ளன. 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமை, 13 வருட கட்டாயக் கல்வி நிகழ்ச்சித் திட்டம், “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ் 3மாடி வகுப்பறைக் கட்டடம், அதிபர் விடுதி என்பன கிடைக்கப்பபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்
திரு. ஏ.எல்.மிஸ்கீன் விதானே
அதிபர்
அந்-நூர் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை).






